உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோசமான வானிலையால் சென்னை- அந்தமான் விமானங்கள் ரத்து Chennai Rain | chennai Schools Leave

மோசமான வானிலையால் சென்னை- அந்தமான் விமானங்கள் ரத்து Chennai Rain | chennai Schools Leave

வங்க கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தழ்வாக வலுவிழந்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வளவு மழை இல்லை. நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. சாலைகள், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக, சில தனியார் பள்ளிகள் அரைநாள் விடுமுறை அறிவித்தன. breath மோசமான வானிலை காரணமாக, சென்னையில் இருந்து அந்தமான் செல்ல வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 3 விமானங்கள் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதே போல் அந்தமானிலும் மோசமான வானிலையால் அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எஞ்சிய 3 விமானங்கள் தாமதமாகவே சென்னை வந்தன.

டிச 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை