உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்ளாட்சி அமைப்பு பதவிகளை மொத்தமாக கைப்பற்றியது பாஜ Chhattisgarh local body election result| BJP Wo

உள்ளாட்சி அமைப்பு பதவிகளை மொத்தமாக கைப்பற்றியது பாஜ Chhattisgarh local body election result| BJP Wo

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மாநகராட்சிகள், 49 நகராட்சிகளில் கடந்த 11ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்த 10 மாநகராட்சிகளிலும், மேயர் பதவியை பாஜ வென்றது. இந்த மாநகராட்சிகளின் பெரும்பாலன வார்டுகளிலும் பாஜவே கைப்பற்றியது. 49 நகராட்சிகளில் நடந்த தேர்தலிலும், பாஜவின் ஆதிக்கம் குறையவில்லை. 35 நகராட்சி தலைவர் பதவிகளை பாஜ வென்றது. 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு இடமும், சுயேச்சைகளுக்கு 5 இடத்திலும் வெற்றி கிடைத்தது. 114 ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், 81ல் பாஜவும், 22ல் காங்கிரசும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், 10 இடங்களில் சுயேச்சைகளும் வென்றனர். சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு முதல்வர் விஷ்ணு தேவ் சாய் நன்றி தெரிவித்துள்ளார்.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை