வளர்ச்சி பாதையில் சத்தீஸ்கர்: முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மகிழ்ச்சி! Anti Naxal Operation | Amit Shah
நக்சல் வேட்டையில் சாதித்த வீரர்களை கவுரவித்த அமித்ஷா! டிஸ்க்: சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அரசும் நக்சல்களை ஒடுக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய துணை ராணுவப் படை மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படையினர் சேர்ந்து பஸ்தர், நாராயண்பூர், ஜகதல்பூர், பீஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் நக்சல் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவன் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டான். கடந்த மாதம் நக்சல் அமைப்பின் மூத்த தலைவன் பசவராஜு கொல்லப்பட்டான். அந்த வகையில், இந்த ஆண்டில் மட்டும் 186 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஓராண்டில் மட்டும் 403 நக்சலைட்கள் ஒடுக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.