சோழர் ஆட்சியின் சிறப்புகள்: ராஜேந்திர சோழனுக்கு மோடி புகழாரம் Chola Empire | Golden Era
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில், ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. பிரதமர் மோடி, கோயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார். ராஜேந்திர சோழனின் பெருமைகளை நினைவு கூரும் வகையில் சிறப்பு நாணயத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியது. ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பாரதத்தின் அடையாளங்கள். தென் கிழக்கு ஆசியா வரை சோழப் பேரரசு நீண்டிருந்தது. அது, பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்று. ஜனநாயகத்தின் முன்னோடிகள் பிரிட்டிஷார் இல்லை, சோழர்கள். நீர் மேலாண்மையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் சோழர்கள்தான் என மோடி கூறினார். ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் சிலைகள் அமைக்கப்படும் என மோடி கூறினார்.