வயநாடு நிலச்சரிவு மாதவ் காட்கில் சொன்னது என்ன? Chooralmala and Mundakkai region landslide Puthumal
வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை பகுதிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைப்பகுதிகள். டீ, காபி, ஏலக்காய் தோட்டங்கள் நிறைய உள்ளன. இங்குள்ள சிறுசிறு அருவிகளும் ஓடைகளும், ரிசார்ட்களும் அதிகளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்தன. நாளடைவில் சுற்றுலா ஸ்தலங்களாக மாறின. இப்பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தோட்ட தொழிலாளர்கள்தான். சூரல் மலைக்கு பக்கத்தில் உள்ள புத்துமலை என்ற இடத்தில் 2019ம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டது. 17 பேர் உயிரிழந்தனர். அப்போது, நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வல்லுநர் மாதவ் காட்கில் நேரில் சென்று பார்த்தார். நிலச்சரிவுக்கு காரணம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அதன் இயற்கை தன்மையை படிப்படியாக இழந்து வருவதுதான் நிலச்சரிவுக்கு காரணம் என்றார்.