டிசம்பர் 25 மேஜிக்: குளுமையானது சென்னை | Christmas Rain | Chennai Rain |
வங்கக்கடலில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வழுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புதனன்று மாலை முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நள்ளிரவில் விட்டு விட்டு மழை பெய்தது. காலையில் இருந்து காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
டிச 26, 2024