கேரளா, கர்நாடகாவில் பருவமழை தீவிரம்: இயல்பு வாழ்க்கை பாதிப்புHimachal Cloud bust|Landslide|Rain
ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால், கனமழை கொட்டியது. தர்மசாலா, பஞ்ஜார், கட்சா, மணிகரன், சாய்ஞ் உள்ளிட்ட பகுதிகளில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தர்மசாலா அருகே கங்கரா என்ற இடத்தில், நீர் மின்உற்பத்தி நிலைத்தியில் பணியாற்றிய இருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்தனர். குலு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் 10 பேர் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வெள்ள நீரோட்ட பாதையில், பல கனரக வாகனங்கள் சிதறி கிடக்கின்றன. பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் கட்ராவில் பெய்த கனமழையால், வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. டோடா உள்ளிட்ட பகுதிகளில் சூறை காற்றுடன் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஞ்சாப்பின் அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த மேகங்கள் சூழ, திடீரென கனமழை பெய்தது. பொற்கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். தென்மேற்கு பருவமழையால், கேரளாவில் முண்டகை பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட இடம் என்பதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.