முதல்வர் ரங்கசாமியை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜ தலைவர்கள் | CM Rangasamy | N.R.Congress | Gove
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜவை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் தனித்து தேர்தலை சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாஜவுடன் கூட்டணி வைத்தது பல தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்றும் சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து இந்த கூட்டணி ஆட்சி வெற்றிகரமாக 4 ஆண்டுகளை கடந்து நடக்கிறது. புதுச்சேரி கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.