உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ்க்கை அடி மேல் அடி தந்தும் அசராத உழைப்பு | Coimbatore | Special Talented

வாழ்க்கை அடி மேல் அடி தந்தும் அசராத உழைப்பு | Coimbatore | Special Talented

எனக்கு கை இல்லை மகளுக்கு Polio இதைவிடவா பெரிய கஷ்டம் இருக்கு இரும்புமனிதர் செய்தலிவி குடும்பத்தில் வறுமை, விபத்தில் பறிபோன ஒரு கை, உழைப்பை தடுக்கும் முதுமை நாலா பக்கமும் வாழ்க்கை சுழற்றியடித்தும் தளரவில்லை வாழை வியாபாரி செய்தலிவி. காலை பொழுது விடிந்ததும் ஓட ஆரம்பித்தால் இரவு வரை உழைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு கை போனாலும் அவரது நம்பிக்கை கைவிடவில்லை. சாதாரண நபர் இரண்டு கைகளால் தூக்கவே சிரமப்படும் வாழை தாரை ஒரே கையில் லாவமாக தூக்கி வைத்து அசத்துகிறார். கோவை காந்திபார்க் அருகே கடை வைத்துள்ள செய்தலிவி தள்ளுவண்டி மூலமும் வாழை எடுத்து சென்று விற்பனை செய்கிறார். இப்படி பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் செய்தலிவி பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் 2022 ஜனவரி 2ம் தேதி வெளியானது. அந்த செய்தியை பார்த்து ஜெயலட்சுமி என்கிற ஆசிரியை செய்தலிவி பெட்டிக்கடை அமைப்பதற்கு, தனது சேமிப்பு பணம் 50 ஆயிரத்தை வழங்கி உதவியுள்ளார் வியாபாரம் மட்டும் செய்தால் போதாது தேச உணர்வோடு இருக்க வேண்டும் நினைக்கும் செய்தலிவி தனது தள்ளுவண்டியில் தேசிய கொடியை இடம்பெற செய்து மரியாதை செலுத்துகிறார். தனக்கு ஆசிரியை தள்ளுவடி வாங்கி கொடுத்து உதவியது போல அரசும் உதவ வேண்டும் என்கிறார் செய்தலிவி.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை