கட்டு விரியன் பாம்பை கடித்து துப்பிய நபர்-ஷாக் common krait snake | man bites snake | kattu viriyan
இந்தியாவின் கொடிய விஷப்பாம்பு கட்டுவிரியனை கடித்து துப்பிய நபர் திடுக்கிட வைத்த சம்பவம் ஸ்பாட்டில் அதிர்ச்சி காட்சி டைட்டில்: கட்டு விரியன் பாம்பை கடித்து துப்பிய நபர்-ஷாக் common krait snake | man bites snake | kattu viriyan இந்தியாவில் இருப்பதிலேயே மிக கொடிய விஷப்பாம்பு வகையில் முக்கியமானது கட்டுவிரியன் தான். அப்படிப்பட்ட கட்டு விரியன் பாம்பையே ஆசாமி ஒருத்தர் கடித்து தலையை துண்டாக துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம். சித்தூர் மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி அருகே உள்ள சியாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். நேற்று இரவு மது அருந்தி விட்டு தள்ளாடியபடி வீட்டுக்கு நடையை கட்டினார். போதை தலைக்கேறி ரோட்டோரம் சரிந்து விழுந்தார். அங்கேயே படுத்தும் விட்டார். இரவில் தனது உடலில் ஏதோ சுற்றுவதை உணர்ந்த வெங்கடேஷ், கையால் பிடித்தார். அது ஒரு கட்டுவிரியன் பாம்பு. அவருக்கு அதெல்லாம் தெரியவில்லை. வெங்கடேஷ் பிடித்ததும் அவரை பாம்பு கடித்ததாக தெரிகிறது. பதிலுக்கு தன்னை தொந்தரவு செய்த பாம்பை வெறித்தனமாக கடித்தார். பாம்பின் தலையை மட்டும் துண்டாக கடித்து துப்பினார். அங்கேயே பாம்பு செத்து விழுந்தது. மீண்டும் அப்படியே படுத்து விட்டார் வெங்கடேஷ். அந்த வழியாக சென்றவர்கள், வெங்கடேசையும் பக்கத்தில் கடித்து துப்பப்பட்ட பாம்பையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வெங்கடேசை மீட்டு பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடித்தது கட்டு விரியன் பாம்பு என்பதால், உடனடியாக திருப்பதி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கட்டுவிரியன் விஷயம் மிகவும் கொடியது. அதில் Beta Bungarotoxin என்னும் நச்சுப்பொருள் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் தன்மை உடையது. பாம்பு கடித்த உடன் நம் தசைகளை செயல் இழக்க செய்யும். பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நேர்ந்து விடும். உரிய சிகிச்சை கிடைக்காவிட்டால் பாம்பு கடித்த சில மணி நேரத்தில் மரணம் உறுதி. ஒரு மணி நேரத்தில் கூட, பாம்பு கடிபட்டவர்கள் இறந்து விடக்கூடும் அபாயம் உண்டு. 3 முதல் ஐந்தரை அடி வரை வளரும் கட்டு விரியன், பொதுவாக கூச்ச சுபாபம் கொண்டது. பகலில் அமைதியாக இருக்கும். பெரும்பாலும் ஓய்வெடுக்கும். பகலில் யாராவது சீண்டினால் கூட, தப்பிக்கவே பார்க்கும். கடிக்க நினைக்காது. ஆனால் இரவில் ஆக்ரோஷமாக மாறிவிடும். காரணம், இரவில் தான் வேட்டையாடும். எலி, தவளை, பல்லி இதன் முக்கிய உணவு. இரவில் யாரும் சீண்டாத வரை ஒன்றும் இல்லை. தானாக வழியே சென்று கடிக்காது. அதே நேரம் யாராவது சீண்டினால் நிச்சயம் கடிக்க பாயும். தெரியாமல் பாம்பை மித்தாலோ அதை தொட்டாலோ கடி நிச்சயம். கட்டுவிரியன் கடித்தால் பெரிதாக வலி தெரியாது. இதனால் தான் இரவு நேரத்தில் பாம்பு கடித்ததே தெரியாமல் பலர் இறந்து விடுகின்றனர். எனவே தான் இரவு நேரத்தில் இந்த பாம்பிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எப்போதும் பாம்பு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வளவு வீரிய விஷம் கொண்ட பாம்பு உண்மையிலேயே வெங்கடேசை கடித்ததா அல்லது அதற்கு முன்பே அவர் பாம்பை கடித்து துப்பி விட்டாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. இருப்பினும் பாம்பு கடித்ததாகவே அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.