உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரில் சடலமாக மீட்கப்பட்ட சேலம் குடும்பம்; என்ன காரணம் ? | Crime News | Pudukkottai car | Salem

காரில் சடலமாக மீட்கப்பட்ட சேலம் குடும்பம்; என்ன காரணம் ? | Crime News | Pudukkottai car | Salem

புதுக்கோட்டை அடுத்த இளங்குடிபட்டியில் நகரசிவ மடம் உள்ளது. இந்த மடத்திற்கு முன்பாக நீண்ட நேரமாக கேட்பாரின்றி ஒரு கார் நின்றது. இன்று காலை மடத்தில் பணிபுரியும் வாட்ச்மேன் அடைக்கலம் அருகில் சென்று பார்த்த போது 5 பேர் அசைவின்றி கிடப்பதை பார்த்து ஷாக் ஆனார். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நமணசமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரின் உள்ளே இருந்தவர்களை மீட்டனர். 3 பெண்கள், 2 ஆண் உட்பட ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர். காரின் நம்பரை டிராக் செய்து போலீசார் விசாரித்தனர்.

செப் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை