உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பதட்டம் | VCK executive attacked | Auto driver arrested

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பதட்டம் | VCK executive attacked | Auto driver arrested

விசிக பிரமுகர் உயிரை பறித்த ஆட்டோ மோதல் பிரச்சனை மயிலாடுதுறை நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ராஜேஷ், வயது 26. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், செயற்கை கால் பொருத்திக்கொண்டுள்ளார். நேற்றிரவு அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு டூவீலரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். மயிலாடுதுறை பிரதான சாலையில் மர்ம நபர் ஒருவர் ராஜேஷை வழிமறித்து நிறுத்தியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேஷின் தலை, உடலில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மணல்மேடு போலீசார் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாவட்ட எஸ்பி மீனா சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். நாகையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அங்க வந்த ராஜேஷ் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி