உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கலர் ஜெராக்ஸ் பணம் கொடுத்து ஏமாற்றிய கும்பல் | Crypto currency | Fraud | Nellai Police

கலர் ஜெராக்ஸ் பணம் கொடுத்து ஏமாற்றிய கும்பல் | Crypto currency | Fraud | Nellai Police

திருநெல்வேலி திசையன்விளையை சேர்ந்தவர் ஆண்டனி செல்வன். திருநெல்வேலி ராஜராஜேஸ்வரி நகரில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் செய்து வருகிறார். இவரிடம் மதுரை அழகர் கோவில் சாலையை சேர்ந்த முகமது ரியாஸ், சங்கரன்கோவில், தலைவன்கோட்டை அய்யாதுரை , கயத்தாறு இசக்கிமுத்து ஆகியோர் அறிமுகமாகினர். வெளிநாட்டு கரன்சி பரிமாற்ற தொழிலில் ஈடுபடுவதாக கூறி அமெரிக்க டாலர் கிரிப்டோ கரன்சி தேவைப்படுவதாக அணுகி உள்ளனர். 82 ஆயிரத்து 691 எண்ணிக்கையிலான கிரிப்டோ கரன்சியை ஆன்லைன் மூலம் தங்கள் கணக்கில் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு பேசிய டீல் படி 75 லட்சம் கொடுத்து சென்றனர். அவர்கள் கொடுத்து சென்ற பணத்தை சரிபார்த்த போது அவை அனைத்தும் ஒரிஜினல் ரூபாய் நோட்டுகள் இல்லை என்பது தெரிந்தது. ரூபாய் நோட்டுகள் போலவே தயாரிக்கப்பட்ட கலர் ஜெராக்ஸ் நோட்டுகள். தான் ஏமாற்றப்பட்டதை தொடர்ந்து ஆண்டனி செல்வன் பெருமாள்புரம் போலீசில் புகார் கொடுத்தார். கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடினர். பழனி, திண்டுக்கல், பாலக்காடு என பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகமது ரியாசிடமிருந்து 75 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டெதர் கரன்சி மீட்கப்பட்டது.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை