கிராமி விருது மேடையில் ஒலித்த புத்தரின் போதனை! DalaiLama Grammy award audio book
ஒவ்வொரு வருடமும் இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் கிராமி விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 68-வது கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இதில் சிறந்த ஆடியோ புத்தக பிரிவுக்கான கிராமி விருது திபெத்தில் வாழும் 90 வயதான புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக அவர் நேரில் சென்று விருதை பெறவில்லை. அவர் சார்பில் பிரபல இசை கலைஞர் ரூபஸ் வைன்ரைட் விருதை பெற்றார். இசைக் கலைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது தலாய் லாமாவுக்கு வழங்கப்பட்டது எப்படி என்ற ஆச்சரியம் பலருக்கும் எழுந்தது. #DalaiLama #Grammys #Grammys2026 #GrammyWinner #BuddhistLeader #Meditations #AudioBook #HistoricWin #LosAngeles