/ தினமலர் டிவி
/ பொது
/ டானா புயல் ஆட்டம் முடிந்தது; ரயில், விமான சேவை மீண்டும் துவங்கியது! DANA Cyclone | Odisha
டானா புயல் ஆட்டம் முடிந்தது; ரயில், விமான சேவை மீண்டும் துவங்கியது! DANA Cyclone | Odisha
வங்கக்கடலில் உருவான டானா புயல் இன்று அதிகாலை ஒடிசாவில் கரையை கடந்தது. புயலின் தீவிரத்தால் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதலே சூறைக்காற்று வீசியது. புயல் கரையை கடந்த சமயத்தில், 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசாவில் 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசு முகாம்களில் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
அக் 25, 2024