சொட்டு நீர் அமைப்பில் தொட்டி அமைக்க போராடும் விவசாயிகள் |Decreasing water level |Drop water system
விவசாயத்திற்கு நீர் தேவையை குறைத்து மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் சொட்டு நீர் அமைப்பை ஊக்குவித்து வருகின்றன. தமிழகத்தில் இப்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாய ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் நீர் குறைவாக குறைந்த அழுத்தத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இந்த நீரை நேரடியாக சொட்டுநீர் அமைப்பிற்கு பயன்படுத்த முடியாது. இதற்கு தீர்வு காணும் வகையில் SWMA திட்டம் மூலம் நீர் தொட்டி கட்டி அதில் நீரை சேமித்து சொட்டு நீருக்கு சீரான அழுத்தத்தில் பம்ப்செட் மூலம் பாசனம் செய்ய மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக தொட்டி கட்ட 40 ஆயிரம் ரூபாயும், குழாய் அமைக்க பத்தாயிரம், பம்ப் செட் பொருத்த 15 ஆயிரம் என மொத்தம் 65 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு சிமென்ட் தொட்டி அமைக்க 3 லட்சம் வரை செலவாவதால் மானியத்தை உயர்த்தி கொடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் அந்த SWMA மூலம் சிமென்ட் தொட்டி அமைக்க வழங்கிய மானியத்தையே நிறுத்திவிட்டு தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் கூடுதலாக தார்பாலின், களிமண் வகை தொட்டிகள் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் கன மீட்டருக்கான மானிய தொகையை பாதியாக குறைத்து தொட்டியின் கொள்ளளவை உயர்த்தி மொத்த மானியம் அதிகமாக வழங்குவதுபோல் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் விவசாயிகள்..