உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடிகை தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது |Deepika Padukone | Ranveer Singh| Girl Baby for Deepika |

நடிகை தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது |Deepika Padukone | Ranveer Singh| Girl Baby for Deepika |

மும்பை ஆஸ்பிடலில் பிரசவம் தீபிகாவுக்கு அழகு பாப்பா டிஸ்க்: ஷாரூக் கான் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் நடிகை தீபிகா படுகோன், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 2018ல் திருமணம் செய்தார். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஜோடி சேர்ந்த இவர்கள், நிஜ வாழ்விலும் ஜோடியாகினர். இத்தாலியில் இவர்களின் திருமணம் நடந்தது. தொடர்ந்து இருவரும் நடிப்பில் பிஜியாக இருந்தனர். இந்நிலையில், தீபிகா கருவுற்றிருப்பதாகவும், செப்டம்பரில் குழந்தை பிறக்கும் என இந்தாண்டு துவக்கத்தில் சமூக வலைதளங்களில் தகவல் கசிந்தது. சில நாட்களுக்கு முன் தீபிகா படுகோன் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் போட்டோ சூட் படங்களை வெளியிட்டார். ரன்வீர் சிங்கும் தானும் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அந்த போட்டோக்கள் இருவரின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய நிலையில், விமர்சனங்களும் எழுந்தன. தீபிகாவை பார்த்தால் கர்ப்பிணி மாதிரி தெரியலையே என சிலர் கருத்து பதிவிட்டதும் வேகமாக பரவியது. இதற்கிடையே, கடந்த 6ம் தேதி மும்பை சித்தி விநாயகர் கோயிலில் ரன்வீர் - தீபிகா ஜோடி சாமி தரிசனம் செய்தனர். தீபிகா நிறைமாத கர்ப்பிணியாக புடவையுடன் கோயிலுக்கு வந்த காட்சிகள் விமர்சனம் செய்தவர்களின் சந்தேகத்தை தீர்த்தது. இன்று மும்பை ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன தீபிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, ரன்வீர் அறிவித்துள்ளார்.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ