உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முப்படை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் வாகனம் கும்பகோணம் வந்தது! Defence Pensioners | SPARSH Va

முப்படை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் வாகனம் கும்பகோணம் வந்தது! Defence Pensioners | SPARSH Va

முப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க பல இடங்களுக்கு அலைய வேண்டியதிருந்தது. அவர்களது குறைகளை கேட்டு, சரி செய்யும் நடமாடும் வாகன திட்டத்தை சில தினங்களுக்கு முன் அமைச்சர் முருகன் திருச்சியில் துவக்கி வைத்தார். அதன்படி 5 வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. வாகனத்தில் இருக்கும் அதிகாரிகள், பாதுகாப்பு படை ஓய்வூதியதாரர்களிடம் குறைகளை கேட்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு வாகனம் கும்பகோணம் வந்தது. அதற்கு பாஜ மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் வரவேற்பு அளித்தார். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களிடம் குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்வதாக அதிகாரிகள் கூறினர்.

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை