உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி பாஜ அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் Delhi budget 2025| Rekha Gupta | Atal Can

டில்லி பாஜ அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய திட்டங்கள் Delhi budget 2025| Rekha Gupta | Atal Can

டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல்வர் ரேகா குப்தா இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். ரேகா தலைமையிலான பாஜ அரசின் முதல் பட்ஜெட் மட்டுமின்றி டில்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் பாஜ அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. டில்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டங்களுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது முந்தைய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் தொகையை விட 31 சதவீதம் அதிகம் என ரேகா கூறினார். டில்லி அரசு பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்: பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்காக 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் நிலையில், டில்லி அரசின் சார்பில் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். இதற்காக 2,144 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்பிணிகளுக்கு அரசின் சார்பில் 21,000 ரூபாய் உதவித் தொகையுடன், மருத்துவ கிட்களும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக, 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். டில்லியில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்த 696 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாஜவின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகள். எங்கள் ஆட்சியின் முதல் பட்ஜெட்டிலேயே இவை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ரேகா கூறினார். என்சிஆர் எனும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியுடன் டில்லியின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் சாலைகளை மேம்படுத்த 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி புதிய சுகாதார மையங்கள் அமைத்தல், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சுகாதார மையங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார திட்டங்களுக்காக 6,874 கோடியும், போக்குவரத்து துறை மேம்பாட்டிற்காக 12,952 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக, டில்லியின் முக்கிய இடங்களில் கூடுதலாக 50 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும். சாலை, பாலங்கள் மேம்பாட்டிற்காக 3843 கோடியும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மேம்பாட்டிற்காக 506 கோடி, மாசுகட்டுப்பாட்டு துறைக்கு 300 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியாளர்களுக்கு சுற்றுச்சூழல், வனம் பற்றிய எந்த புரிதலும் இல்லை. எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என அப்போது ரேகா குறிப்பிட்டார். வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு சத்தான ஆகாரம் கிடைக்க வழி வகை செய்யும் வகையில், 100 இடங்களில் அடல் கேன்டீன் திட்டம் செயல்படுத்தப்படும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நுாற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், இத்திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயணத்திற்காக, முந்தைய அரசின் சார்பில் டிக்கெட் வழங்கப்பட்டது.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி