உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்

நீதிபதி வீட்டில் பணக்குவியல்; வீடியோ வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் சர்மா டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள அரசு பங்களாவில் வசிக்கிறார். கடந்த 14ம் தேதி இரவு இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. குடும்பத்தினர் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்தனர். தீணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றிய அறையில் இருந்து பாதி எரிந்த நிலையில் பணக்குவியல் இருந்ததை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 15 கோடி ரூபாய் இருந்ததாகவும், சில கோடி ரூபாய் நோட்டுகள் எரிந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கவனத்துக்கு சென்றது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமைத்தார். நீதிபதி வீட்டில் ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதவேற்றப்பட்டது.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ