உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லி எஸ்ஐ கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம் | Delhi Police SI | CBI arrest

டில்லி எஸ்ஐ கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம் | Delhi Police SI | CBI arrest

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீசில் டிராவல்ஸ் நிறுவனம் தொடர்பான புகார் நிலுவையில் இருந்தது. டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் உரிமையாளரின் மைத்துனரை அழைத்த சைபர் கிரைம் எஸ்ஐ விசாரணைக்கு வர வேண்டும் அல்லது கைது செய்யப்படுவீர்கள் என மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து கடந்த 7ம் தேதி மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்த எஸ்ஐ இந்த வழக்கில் இருந்து அவரையும், அவரது மைத்துனரையும் விடுவிக்க 50 லட்சம் லஞ்சம் தர வேண்டும். மறுத்தால் இருவரையும் கைது செய்வோம் என மிரட்டல் விடுத்துள்ளார்.பிறகு அவரை ஓட்டலில் டீல் பேசப்பட்டுள்ளது. இறுதியாக 16 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டு எஸ்ஐ மிரட்டி உள்ளார். பிறகு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் டில்லியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வக்கீலுடன் சென்ற போது, லஞ்சம் தராவிட்டால் பின் விளைவுகள் ஏற்படும் என எஸ்ஐ மிரட்டல் விடுத்துள்ளார். அப்போது இரு தரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் 14 லட்சம் லஞ்சம் தர டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஒப்புக்கொண்டார்.

மார் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி