/ தினமலர் டிவி
/ பொது
/ கேரளாவில் உதயநிதி பேச்சுக்கு பாஜ எதிர்ப்பு | Deputy CM Udhayanidhi | Speech in event | Anoop Antony
கேரளாவில் உதயநிதி பேச்சுக்கு பாஜ எதிர்ப்பு | Deputy CM Udhayanidhi | Speech in event | Anoop Antony
கேரளாவின் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா குழுமம் சார்பில் கலை, இலக்கிய திருவிழா-2024 நிகழ்ச்சி 2ம் தேதி நடந்தது. தமிழக துணை முதல்வர் உதயநிதி திராவிட இயக்க அரசியலில் இலக்கியம், மொழியியலின் தாக்கம் என்ற தலைப்பில் பேசினார். நம் 2 மாநிலங்களும் நமது பண்பாட்டின் மீது அதிக பற்று உடையவை. பாஜவிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்பவை. ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை, ஒரே மதம் என்ற நிலையை உருவாக்க பாஜ முயற்சிக்கிறது. அதை முறியடிக்க நாம் கரம் கோர்ப்போம். அனைத்து மாநிலங்களின் மொழி, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பாஜவின் பிடியில் இருந்து காப்போம் என்றும் பேசி இருந்தார்.
நவ 04, 2024