/ தினமலர் டிவி
/ பொது
/ அயோத்தியில் இருந்து துணை சபாநாயகர்? | Deputy Speaker post | Ayodhya | Faizabad | Awadhesh Prasad
அயோத்தியில் இருந்து துணை சபாநாயகர்? | Deputy Speaker post | Ayodhya | Faizabad | Awadhesh Prasad
பாஜ வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறை சபாநாயகர் ஆகி விட்டார். இப்போது இருக்கும் ஒரே கேள்வி; யார் துணை சபாநாயகர் என்பது தான். இந்த பதவியை எதிர்கட்சிகளுக்கு தர வேண்டும் என்று இண்டி கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது பற்றி எந்த உத்தரவாதத்தையும் பாஜ அரசு தரவில்லை. அதனால் தான் சபாநாயகர் தேர்தலில் போட்டி வேட்பாளரை இண்டி கூட்டணி நிறுத்தியது. தொடர்ந்து துணை சபாநாயகர் பதவியை பெற இண்டி கூட்டணி முயற்சித்து வருகிறது. ஆனால் இதுவரை துணை சபாநாயகர் தேர்தல் தேதி பற்றிய எந்த அறிவிப்பும் லோக்சபா கூட்டத்தில் வெளியாகவில்லை.
ஜூன் 30, 2024