பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மாணவர்: பின்னணி என்ன? | Devender Singh | Pakistani intelligence
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திர சிங் தில்லான், வயது 25. பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியல் படிக்கிறார். மே 12ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டார். இதனால் ஹரியானாவின் கைதல் நகரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தேவேந்திர சிங் 2024 நவம்பரில் பாகிஸ்தானில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராக்கு யாத்திரை சென்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பினருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தேவேந்திர சிங்கை மூளை சலவை செய்த அவர்கள் பணம் கொடுத்து இந்தியா பற்றிய ரகசியங்களை கேட்டுள்ளனர். அப்போது பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளிடம் தேவேந்திர சிங் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.