/ தினமலர் டிவி
/ பொது
/ சைபர் மோசடி கும்பலிடம் ₹11 கோடி இழந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் | Digital arrest fraud | Cyber crime |
சைபர் மோசடி கும்பலிடம் ₹11 கோடி இழந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் | Digital arrest fraud | Cyber crime |
பெங்களூருவை சேர்ந்த 39 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் 11.8 கோடி ரூபாயை இழந்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மோசடி நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை நடந்துள்ளது. முன்னதாக நவம்பர் 11ல் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அதிகாரி பேசுவதாக பாதிக்கப்பட்ட சாப்ட்வேர் இன்ஜினியருக்கு கால் வந்துள்ளது. ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்கள் சிம் கார்டு சட்டவிரோத விளம்பரங்கள், துன்புறுத்தல் செய்திகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக போன் அழைப்பில் கூறியுள்ளனர். இதற்காக மும்பை கோலாபா சைபர் போலீசில் புகார் பதிவு செய்துள்ளதால் உங்களை டிஜிட்டல் கைது செய்வதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
டிச 23, 2024