கொண்டாடி மகிழும் குடியிருப்பு வாசிகள்! Dinamalar | Carnival Apartment Kondattam | Chennai
அப்பார்ட்மென்ட்வாசிகளை ஒன்றிணைக்கும் வகையில் தினமலர் முன்னெடுத்தது தான், அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்கு உறுதுணையாக, கிட்டீ பட்டீ, பூர்விகா அப்ளையன்ஸ், நிசான், மயில் மார்க் ஹோம் கேர் புராடக்ட்ஸ், குருதேவ் ஸ்கோடா, போகா ஈவென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கைகோர்த்து நடத்தி வருகின்றன. சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சுதர்சனம் சாலையில் உள்ள வி.ஜி.என் ஸ்டாப்போர்ட் அப்பார்ட்மென்டில் ஞாயிறன்று நிகழ்ச்சி நடந்தது. குடியிருப்புவாசிகளின் உற்சாகத்தால் அந்த வளாகமே திருவிழாக்கோலம் பூண்டது. இந்நிகழ்வில் கோலப்போட்டி, மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மாரத்தான், ஆடல், பாடல் நிகழ்ச்சி, சிறுவர் விளையாட்டு, மேஜிக் ஷோ, உறியடி உள்ளிட்டவை நடந்தன. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டு வார இறுதி நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.