வித்யாரம்பம் குழந்தைகளுக்கு போட்டோ & கிப்ட் பரிசு | dinamalar| Arisuvadi arambam| vidhyarambam
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான, பட்டம் இதழும், வேலம்மாள் நியூஜென் கிட்ஸ்சும் இணைந்து வழங்கும், அனா… ஆ வன்னா.. அரிச்சுவடி ஆரம்பம் என்ற நிகழ்ச்சி, கிழக்கு தாம்பரத்தில் உள்ள. ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக SBI வங்கியின் ஓவ்வு பெற்ற உதவி பொது மேலாளர் கடலுார் கோபி பாகவதர், டி.ஏ.வி., குழும பள்ளிகளின் கல்வி இயக்குநர் சாந்தி அசோகன், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதாசேஷய்யன், ஒய்வு பெற்ற டி.ஐ.ஜி., கே.வி.கே. ஸ்ரீராம், நாடக நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, தர்மபிரோபதனா அறக்கட்டளை, காஞ்சி காமகோடி பீடம் அரங்காவலர் கிரி ஜே.சீதாராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் குழந்தையின் கை விரல் பிடித்து, நெல் மணியில் அ, ஆ, எழுத வைத்து, அரிச்சுவடியை தொடங்கி வைத்தனர்.