ராஜ்யசபா சீட் மறுப்பால் தேமுதிக நிலைப்பாட்டில் மாற்றம்! Premalatha | DMDK|EPS |ADMK|2026 Election
அரை சதவீத ஓட்டு கூட இல்லாத தே.மு.தி.க.வை எப்படி கூட்டணிக்குள் வைத்திருக்க முடியும்? என சில மாதங்களுக்கு முன், அ.தி.மு.க, தி.மு.க என, இருதரப்பிலும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அலட்சியமாக கருத்து கூறி வந்தனர். ஆனால் 2026 சட்டசபை தேர்தல் நெருங்குவதால், இரு கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றன. இதற்காக, சிறிய கட்சிகள் என்றாலும், அவற்றை மரியாதையோடு நடத்துவதற்கு, இருதரப்பிலும் முயன்று வருகின்றனர். இந்நிலையில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 19ல் நடக்கவிருக்கிறது. அதில், தி.மு.க.வுக்கு நான்கு; அ.தி.மு.க.வுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. 2024 லோக்சபா தேர்தலின்போது, தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, அ.தி.மு.க. தரப்பு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என, தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். அப்படி எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என, அ.தி.மு.க. தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது. இது, தே.மு.தி.க.வை அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் தி.மு.க.வோடு நெருக்கம் காட்டத் துவங்கினர். வரும் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை தே.மு.தி.க. எடுக்கக்கூடும் என பதறிய எடப்பாடி பழனிசாமி, கடைசிநேர முயற்சியாக, தே.மு.தி.க. பொருளாளரும், பிரேமலதா தம்பியுமான சுதீஷை அழைத்து பேச்சு நடத்தினார்.