உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட விசிக போஸ்டரால் பரபரப்பு! DMK - VCK Cold War|TN Politics|Thirumavalavan

கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட விசிக போஸ்டரால் பரபரப்பு! DMK - VCK Cold War|TN Politics|Thirumavalavan

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசினார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எல்லா கட்சிக்குமே ஆட்சி, அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்கும். அதைத் தான் நான் கூறினேன். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடக்கிறது. தற்போது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கு தர வேண்டிய சூழல் நிலவவில்லை என திருமாவளவன் சமாளித்தார். இந்நிலையில் அம்பேத்கர் பற்றிய நுால் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அதே விழாவில் நடிகர் விஜய், திமுகவை விமர்சித்ததுடன், அந்த கட்சியின் அழுத்தத்தால் தான் திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதாக கூறினார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ