தொகுதிகளை 4 நிறமாக பிரித்து பணியை முடுக்கி விட்ட திமுக! DMK | MK Stalin | 2026 Election
2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சேர்ந்து, 159 தொகுதிகளில் வெற்றி பெற்றன. அ.தி.மு.க, பா.ஜ கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றியது. 2026 சட்டசபை தேர்தலில், மீண்டும் ஆட்சியை பிடிப்பதோடு, 200 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து திமுக தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. இதற்காக பல கட்டங்களில் கட்சியினரும், வியூக வகுப்பு நிறுவனங்களைச் சேர்ந்தோரும் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளனர். தேர்தல் வெற்றி, தோல்வி, சாதகம், பாதகம் ஆகியவை குறித்து, பென் நிறுவனம் சமீபத்தில் தமிழக முழுதும் சர்வே நடத்தியது. அதன் அடிப்படையில் 100 தொகுதிகளில், தி.மு.க. கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. தற்போதைய எம்.எல்.ஏ.க்களில், 25 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு துளியும் இல்லை என்பதும், தெரிய வந்திருக்கிறது. அந்த சர்வே முடிவுகளை அடிப்படையாக வைத்து, தேர்தலை நோக்கிய செயல்பாடுகளில், சில விஷயங்களை அதிரடியாக செய்ய தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது.