15 ஆண்டாக திருடி ஷாப்பிங் காம்பிளக்ஸ் கட்டிய பிளாஸ்பேக்! | DMK Panchayat President | Kanchipuram | T
திமுகவை சேர்ந்த அவருக்கு வயது 51. பாரதியிடம் நடத்திய தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: 15 ஆண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார், வேலுார், கிருஷ்ணகிரி என பல இடங்களில் ஓடும் பஸ்களில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை திருடி உள்ளேன். திருடிய நகைகளை விற்று கிடைத்த பணத்தில் சொந்த ஊரில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்று கட்டி உள்ளேன். ஊராட்சி தலைவியான பின் திருட்டு தொழிலை விட்டு விடும்படி உறவினர்கள் கூறினர். பணம், புகழ், வசதிகள் வந்த பின்பும், திருடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்காக என்னால் திருடுவதை விட முடியவில்லை. இனி திருடவே கூடாது என, ஒவ்வொரு நாளும் சபதம் எடுப்பேன். ஆனால், திருடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் தோற்று விடுவேன்.