/ தினமலர் டிவி
/ பொது
/ முகத்தில் படுகாயங்களுடன் 4 வயது சிறுமி ஆஸ்பிடலில் அட்மிட் | Dog bite | 4 Years old girl child
முகத்தில் படுகாயங்களுடன் 4 வயது சிறுமி ஆஸ்பிடலில் அட்மிட் | Dog bite | 4 Years old girl child
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சரஸ்வதி நகரில் யாதவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு எல்.கே.ஜி படிக்கும் 4 வயது சிறுமி ஜெயஸ்வினி, வகுப்பறையில் இருந்து கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் கூட்டமாக வந்த தெரு நாய்கள் மாணவி ஜெய்ஸ்வினியை துரத்தியுள்ளது. பயந்து ஓடிய மாணவியை பாய்ந்து முகத்தில் தாக்கி உள்ளன. அருகில் இருந்த பணியாளர்கள் நாய்களை துரத்தி சிறுமியை மீட்டனர். முகத்தில் ரத்த காயங்களுடன் பரமக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டிச 18, 2024