/ தினமலர் டிவி
/ பொது
/ நாக்பூரில் 2 கேஸ் உறுதி: HMPV வைரஸ் பாதிப்பு 7 ஆனது Don't Worry Says centre HMPV Cases increased 7 c
நாக்பூரில் 2 கேஸ் உறுதி: HMPV வைரஸ் பாதிப்பு 7 ஆனது Don't Worry Says centre HMPV Cases increased 7 c
நுரையீரலை தாக்கும் HMPV எனப்படும் வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருவது பல நாடுகளில் பீதியை கிளப்பியுள்ளது. சீன மருத்துவமனைகளில் HMPV வைரஸ் பாதித்தவர்கள் மாஸ்க்குடன் இருக்கும் வீடியோ, போட்டோக்கள் வெளியாகி இந்தியாவிலும் பயத்தை கூட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 5 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, ஆமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஜன 07, 2025