கனடா வெளியிட்ட விளம்பரம்; அதிபர் டிரம்ப் உச்சகட்ட கோபம் donaldTrump |America vs Canada |trade war
கனடா மீது அமெரிக்க அதிக வரி விதித்ததால், இரு நாடுகள் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், டிரம்பின் வரி விதிப்பு கொள்கையை விமர்சிக்கும் வகையில், விளம்பரத்தை கனடா வெளியிட்டது. அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன், வரிவிதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ, அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கோபத்தை உண்டாக்கியது. இதனால், கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்வதாக அவர் அறிவித்தார். வரிகள் பற்றி ரீகன் எதிர்மறையாக பேசும் அந்த வீடியோ போலியானது என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவற்றிற்கு வரிகள் மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார். ரொனால்டு ரீகன் பேசியதை எடிட் செய்து, விளம்பரத்தில் திரித்து பயன்படுத்தி இருப்பதாக ரொனால்டு ரீகன் அறக்கட்டளை அறிவித்துள்ளது.