உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரணத்தில் முடிந்த டிரைவர்கள் மோதல் | Drivers fight | Bus driven on driver | Andhra pradesh | CCTV

மரணத்தில் முடிந்த டிரைவர்கள் மோதல் | Drivers fight | Bus driven on driver | Andhra pradesh | CCTV

டிரைவர் மீது பஸ் ஏற்றி இழுத்து சென்ற கொடூரம் பதைபதைக்கும் வீடியோ ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் செப்ரோலு பழைய ரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் ராஜு. ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சில் டிரைவராக வேலை செய்து வந்த நிலையில், ஒரு வாரம் முன்பு பொன்னூரில் குடிபெயர்ந்து மார்னிங் ஸ்டார் டிராவல்சில் பணியில் சேர்ந்தார். இவர் முன்பு வேலை பார்த்த ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்சில் என்டிஆர் மாவட்டம் விஜயவாடா அய்யப்பா நகரை சேர்ந்தவர் சீனிவாசராவ் டிரைவராக உள்ளார். இவர்கள் 2 பேரும் ஓட்டும் பஸ்கள் நேற்று இரவு பெங்களூரில் இருந்து விஜயவாடா நோக்கி புறப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே இருவரும் போட்டிபோட்டு ஓட்டி வந்த நிலையில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் பங்காருபாலம் அருகே 2 பஸ்களின் சைடு கண்ணாடிகள் உரசின. இதனால் இருவரும் பஸ்சை ஓட்டிக்கொண்டே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். மகாசமுத்திரம் டோல்கேட்டில் வந்தபோது மார்னிங் ஸ்டார் டிரைவர் சுகாதகர் ராஜு கீழே இறங்கி வந்து ஸ்ரீ கிருஷ்ணா டிராவல்ஸ் பஸ்சை மறித்து வாக்குவாதம் செய்தார். இதனால் கோபமடைந்த டிரைவர் சீனிவாசராவ், சுதாகர் மீது பஸ்சை ஏற்றி நிறுத்தாமல் ஓட்டி சென்றார். பஸ்சின் அடியில் சிக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட சுதாகர் ராஜு அதே இடத்தில் இறந்தார்.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை