தம்பதி மீது தாக்குதல் நடத்திய ஷோரூம் உரிமையாளர் கைது! E Bike | Show Room | Battery Issue | Chennai
ென்னை போரூர் பாலமுருகன் நகரில் தம்பதி அருண், செல்வி வசிக்கின்றனர். இவர்கள் காரம்பாக்கத்தில் உள்ள ஷோரூமில், 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் எலக்ட்ரிக் பைக் ஒன்று வாங்கினர். 95 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பைக் அடிக்கடி பழுதாகி வந்தது. மன உளைச்சல் அடைந்த தம்பதி அதனை சரி செய்து பயன்படுத்தி வந்தனர். கடந்த மாதம் மீண்டும் பைக் பழுதாகியது. வாகனம் வாங்கிய கடையில் பழுது நீக்க கொடுத்தனர். ஒரு மாதமாகியும் அதனை சரி செய்து தரவில்லை. இதனால் தம்பதிகள் இருவரும் கடைக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது ஷோரூம் உரிமையாளர் கணேஷ், பேட்டரி பழுதாகிவிட்டது, அதனை சரி செய்ய முடியாது என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். பேட்டரி வாரண்டி 3 ஆண்டுகள் இருப்பதால், அதனை மாற்றி தரும்படி அருண் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஷோரூம் உரிமையாளர் கணேஷ், அருண் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். தடுக்க சென்ற மனைவி செல்வியின் மூக்கிலும் குத்தினார். காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். அருண் அளித்த புகாரின் போலீசார் மதுரவாயல் போலீசார் ஷோரூம் உரிமையாளர் கணேசை கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழுதான பைக் குறித்த கேள்வி எழுப்பிய தம்பதி மீது ஷோரூம் உரிமையாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #EBike #ShowRoom #BatteryIssue #Chennai #ElectricBike #GreenTransport #SustainableTravel #EcoFriendly #RideElectric #BikeLife #UrbanMobility #ChennaiBikes #Electric vehicles #RideChennai #BikeShowRoom #BatteryProblems #GetOnABike #CyclePath #ChennaiRides