ஹரியானாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 | Earthquake | Jhajjar Haryana | Delhi-NCR
தலைநகர் டில்லியில் இன்று காலை 9 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டடங்கள் குலுங்கியதால் சில பகுதிகளில் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது. டில்லி, உத்தரப்பிரதேசத்தின் நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் சில வினாடிகள் நீடித்தது. ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஜஜ்ஜார் பகுதியை சேர்ந்த ராஜ்பாலா கூறுகையில், நான் என் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தேன். திடீரென எல்லாம் பலமாக குலுங்க தொடங்கியது. இதற்கு முன் இதுபோன்ற நிலநடுக்கத்தை நான் உணர்ந்ததில்லை என்றார்.