உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திரா, தெலங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! | Earthquake in Andhra, Telangana | Earthquake

ஆந்திரா, தெலங்கானாவில் திடீர் நிலநடுக்கம்! | Earthquake in Andhra, Telangana | Earthquake

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. தெலங்கானா ஐதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி கொத்தகுடேம், மனுகுரு, கோதாவரி கனி, பூபாலபள்ளி, சர்லா, சிந்தகனி, பத்ராசலம், ஆந்திராவில் விஜயவாடா, ஜக்கையாபேட்டை, திருவூரு, கம்பாலகுடேம் பகுதிகளில் காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சில நொடிகள் திடீரென வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பீதியில் மக்கள் வெளியே ஓடி வந்தனர். உயிர்சேதமோ, பொருள்சேதமோ பெரிய அளவில் ஏற்படவில்லை.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை