கொக்கி எங்க போட்டு இருக்காங்க பார்த்தீங்களா? | EB | TNEB | Electricity
சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் திமுக அரசின் சாதனை விளக்க பொது கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன், மேடை பேச்சாளர் லியோனி, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரவு நடந்த இந்த விழாவின் போது நூற்றுக்கணக்கான விளக்குகள், அலங்கார விளக்கு வளைவுகள், மின் விளக்குகளில் திமுக தலைவர்களின் உருவம் தெரியும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஜெனரேட்டர் வைத்து மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். ஆனால் சோழிங்கநல்லூரில் நடந்த திமுக விழாவில் மாநாடு மேடைக்கு அருகே இருந்த மின்சார பெட்டியில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் திருடி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.