பிராட்பேண்டு யூஸர்ஸ் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது! | Commercial | Economy | Economic News | GDP
நாடு முழுதும் அலுவலக இடங்கள் கட்டுவது, விற்பது, குத்தகைக்கு கொடுப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் புதிய நிறுவனங்கள் வருவதால் கட்டுமான நிறுவனங்கள், அலுவலக வளாகங்கள் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடியிருப்பு திட்டங்களை பிரதான பணிகளாக மேற்கொண்டு வந்த கட்டுமான நிறுவனங்களும் அலுவலக வளாகம் கட்டுவதில் ஆர்வமாக உள்ளன. ஐ.டி., பூங்கா மட்டும் கட்டி வந்த நிறுவனங்களும் இப்போது அலுவலக வளாகங்கள் கட்டுகின்றன. வணிக ரியல் எஸ்டேட் வளர்ச்சியில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கோலியர்ஸ் அறிக்கையின் விபரம்: சென்னை, பெங்களூரு, டில்லி, ஹைதராபாத், கொல்கட்டா, மும்பை, புனேவில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு விடப்பட்டது குறித்து ஆய்வு செய்தோம். சென்னையில் 2024ல் 68 லட்சம் சதுரடி அலுவலக இடங்கள் குத்தகைக்கு கொடுக்கப்பட்டன. 2025ல் 96 லட்சம் சதுரடியாக உயர்ந்துள்ளது. இது 41 சதவீதம் அதிகம். அடுத்தபடியாக கொல்கட்டாவில் இந்த உயர்வு விகிதம் 38 சதவீதமாக உள்ளது. அடுத்த இடத்தில் புனே உள்ளது. நாடு முழுதும் பெருநகரங்களில் ஒட்டுமொத்த சராசரி உயர்வு, 6 சதவீதமாக உள்ள நிலையில் சென்னையில் 41 சதவீதமாக உள்ளது. சென்னையில் அலுவலக இடம் சார்ந்த கட்டுமான திட்டங்கள் அதிகரிப்பு, அதை பயன்படுத்துவோரின் அதிகரிப்பும் இதற்கு காரணம்.