உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் வழக்கு EDக்கு கோர்ட் உத்தரவு! | ED | High Court | TASMAC Raid

டாஸ்மாக் வழக்கு EDக்கு கோர்ட் உத்தரவு! | ED | High Court | TASMAC Raid

சென்ற மார்ச் மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மதுபானம் கொள்முதல், டெண்டர் விட்டது உட்பட 1,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. கூடுதல் ஆதாரங்களை கைப்பற்ற சென்ற மாதம் சென்னையின் பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அளித்தனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் எதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் உள்ள தகவல்கள் அறிக்கையாக உள்ளது. ஆவணங்கள் போதுமானதாக இல்லை என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து வீட்டில் சீல் வைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை வக்கீல் ரமேஷ், வீடு சீல் வைக்கப்படவில்லை. சோதனை நடத்த சென்ற போது வீடு மற்றும் அலுவலகம் பூட்டியிருந்தது. தங்களை கேட்காமல் வீட்டின் கதவுகளை திறக்க வேண்டாம் என நோட்டீஸ் ஒட்டியதாக பதில் கூறினார். குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவர் அமலாக்கத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமா என கேள்வி எழுப்பினர். பதிலளித்த அமலாக்கத்துறை வக்கீல் நோட்டீஸை அகற்றிவிடுவதாக கூறினார். நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !