டாஸ்மாக்கில் அடுத்து என்ன? கரு நாகராஜன் பரபரப்பு பேட்டி ED raid tasmac scam Rs. 1000 crore karu naga
டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை 3 நாட்கள் அதிரடி ரெய்டு நடத்தியது. மதுபானங்களை கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்ட விஷயங்களில் டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. அமலாக்கத் துறை சோதனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்கள், பெண்களை 3 நாள் சிறைபிடித்து துன்புறுத்தியதாக தமிழக அரசு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதிட்டார். அதை நிரூபிக்க சிசிடிவி ஆதாரங்கள் உள்ளன எனவும் கூறினார். இதை மறுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அரசின் குற்றச்சாட்டை மறுத்தார். சோதனை குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் அமலாக்கத்துறைக்கு இல்லை. பெண் ஊழியர்கள், நள்ளிரவு வரை காவலில் வைக்கப்படவில்லை என்றார்.