பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்க ED முன்னுரிமை | ED restores 16,000 crore | ED
ED restores 16,000 crore | Enforcement Directorate இந்தியாவில் பொருளாதார குற்றங்களையும், சட்டவிரோத பண மோசடிகளையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் அமலாக்கத்துறை. இந்த அமைப்பு மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவின் கீழ் இயங்கக்கூடியது. குற்றங்களில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்புதல், சொத்துக்களை பறிமுதல் செய்தல், விசாரணைக்காக கைது செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு பல அதிகாரங்கள் உள்ளது. அதே போல் நாடு முழுதும் அரசியல்வாதிகள் முதல் பல தொழிலதிபர்கள் வரை நடுங்கும் 5 சட்டங்களும் இதன் கீழ் உள்ளன. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் , தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டம் , அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் உட்பட 5 பொருளாதார குற்ற தடுப்பு சட்டங்கள் தான் இவை. இதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை மீட்க அமலாக்கத்துறை அதிக முன்னுரிமை தருகிறது.