/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக கொடியுடன் கார்: ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்? Edappadi K Palanisami | ECR incident
திமுக கொடியுடன் கார்: ஸ்டாலின் என்ன சொல்ல போகிறார்? Edappadi K Palanisami | ECR incident
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளை காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பித்த பெண்களை வீடு வரை துரத்தி வந்த கயவர்கள், வீட்டில் இருந்த உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் கூடியதால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து புகாரளித்தால் இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச்சொன்னது என காவல்துறையினர் கேட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறுகின்றனர்.
ஜன 29, 2025