ஆதரவற்ற பாட்டிகளின் உருக வைக்கும் தீபாவளி கொண்டாட்டம் | eera nenjam coimbatore | diwali 2024 video
தீபாவளி என்று வாய் நிறைய சொல்லும் போதே மனதுக்குள் ஒரு கொண்டாட்டம் வந்து விடுகிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, அம்மா, அப்பாவோடு பட்டாசு வெடித்தும் புத்தாடை அணிந்தும் தீபாவளி கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அப்படி தான் எல்லோருக்கும் இன்றைய நாள் பெற்றோர் உற்றார் உறவினர் நண்பர்களோடு மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், சொல்லிக்கொள்ள தங்களுக்கென்று யாருமே இல்லை என்று ஏங்கி நிற்கும் ஆதரவற்ற தாத்தா, பாட்டிகளும் இந்த தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருவது புது நம்பிக்கையை தந்து இருக்கிறது. கோவை ஆர்எஸ்புரத்தில் மாநகராட்சி ஆதரவற்ற முதியோர் இல்லம் உள்ளது. ஈரநெஞ்சம் அறக்கட்டளை இதை பராமரிக்கிறது. இங்கு இருக்கும் தாத்தா, பாட்டிகளுக்கு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. மகன், மகள் இருந்தாலும் இவர்களை புறக்கணித்து விட்டு சென்று விட்டனர். பந்தம், பாசம் எதுவும் இன்றி துரத்தும் ஆயிரம் கவலைகளை மனதுக்குள் புதைத்துவிட்டு தாத்தா, பாட்டிகள் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடிய தீபாவளி மெய்சிலிர்க்க வைக்கிறது.