பன்றிக்கு வைத்த குறியில் பறிபோன உயிர்கள் | Electric shock
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். வழக்கம்போல் காலையில் வயலுக்கு சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அடையாளம் தெரியாத 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தனர். போலீசுக்கு தகவல் கொடுத்தார். மாமல்லபுரம் போலீசார், மின்துறைக்கு தகவல் சொல்லி அப்பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி, இருவரின் உடல்களை மீட்டனர். இறந்த இருவரிடமும், கட்டிங் மிஷின், இரும்பு ராடு, கட்டிங் பிளேயர் போன்ற பொருட்கள் இருந்தன. இதனால், வயலில் உள்ள மோட்டாரை திருடுவதற்காக அவர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
டிச 12, 2024