எக்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை EU fine to X| Elon musk company fi
பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க், 2022ல் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பல்வேறு மாற்றங்களை அறிவித்த மஸ்க், பின் அவற்றை திரும்பப் பெற்றார். எனினும், அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் என்ற அந்தஸ்தை பெற ப்ளூடிக் நடைமுறையை அறிமுகம் செய்தார். இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக, பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டின. ப்ளூடிக் பெறுவது தொடர்பாக பயனர்களிடம் பொருளாதார மோசடியில் ஈடுபட்டதாகவும், எக்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. மேலும் விளம்பரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும், அதில் வெளியிடப்படும் பொதுத் தகவல்களை ஆராய அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஐரோப்பிய யூனியன் கமிஷனின் டிஜிட்டல் சர்வீஸ் ஆக்ட் படி, எக்ஸ் நிறுவனம் சட்ட ரீதியான விதிகளை மீறியதாக அதன் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனர்களிடம் மோசடி, வெளிப்படைத் தன்மையின்மை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியன் ஒழுங்குமுறை ஆணையம், எலான் மஸ்கின் எக்ஸ் நிறுவனத்திற்கு 1,260 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. டெஸ்லா நிறுவன அதிபரும் உலக பணக்காரர் பட்டியலில் முன்னிலை வகிப்பவருமான எலான் மஸ்க் நடத்தும் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் கமிஷன் அபராதம் விதித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. #FineforX| #EU| #ElonMusc| #Digitalserviceact|