பர்மிங்ஹாமில் திக் திக் தருணம் தப்பிய ஏர்இண்டியா பயணிகள் Emergency engine saves passengers UK-bound
இந்தாண்டு ஜூன் 12ம்தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா விமானம் டேக் ஆப் ஆன சில நொடிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருத்துவக் கல்லூரி கட்டடத்தின் மீது மோதியது. இதில், விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 270 பேர் இறந்தனர். இத்தனை பேரின் உயிரை பறித்தது போயிங் ட்ரீம்லைனர் 787-8 Boeing Dreamliner 787-8 ரக விமானம் ஆகும். அதே போயிங் ட்ரீம்லைனர் 787-8 ரக விமானத்தில் மீண்டும் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட சம்பவம் இந்திய விமான போக்குவரத்து துறையை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் இருந்து பர்மிங்ஹாம் நகருக்கு ஏர் இண்டியாவின் போயிங் ட்ரீம்லைனர் 787-8 விமானம் நேற்று புறப்பட்டது. பர்மிங்ஹாம் நகரில் தரையிறங்கும்போது, விமான இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை பத்திரமாக தரையிறக்க முடியுமா? என விமானிகள் அதிர்ச்சியடைந்தனர். எமர்ஜென்சி லேண்டிங் செய்வதற்காக, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால் என்ஜின்கள் செயல்படாமல் போகும்போது Ram Air Turbine system ரேம் ஏர் டர்பைன் என்ற அமைப்பு உதவிக்கு வரும். அது ஒரு சிறிய விசிறி போன்ற சாதனமாகும். விமானத்தின் இன்ஜின்கள் செயல்படாதபோது ரேம் ஏர் டர்பைன் அமைப்பு தானாகவே செயல்படும். இந்த சாதனம் உள்வரும் காற்றை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து, எமர்ஜென்சி பயன்பாட்டுக்கு வழங்கும். அதனால் விமானம் தொடர்ந்து இயங்கி, தரையிறங்கிட உதவும். சுருக்கமாக சொன்னால் எமர்ஜென்சி இன்ஜினாக ரேம் ஏர் டர்பைன் சாதனம் செயல்படும். இந்த ரேம் ஏர் டர்பைன் சிஸ்டம் கைகொடுத்த காரணத்தால் ஏர் இண்டியா விமானம் பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானிகளும் சாமர்த்தியமாக செயல்பட்டனர். விமானம் பத்திரமாக லேண்ட் ஆன பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பயணிகளுக்கோ, விமான ஊழியர்களுக்கோ யாருக்கும் காயம் இல்லை என ஏர் இண்டியா தெரிவித்திருக்கிறது. ஆனால், தரையிறங்கும்போது, எல்லா எலக்ட்ரிகல் மற்றும் ைஹட்ராலிக் எந்திரங்களும் நல்லபடியாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன எனவும் ஏர் இண்டியா கூறியது. எமர்ஜென்சி லேண்டிங் ஆன அந்த ஏர் இண்டியா விமானம் பர்மிங்ஹாம் நகரில் இருந்து உடனடியாக டில்லி கிளம்புவதாக இருந்தது. ஆனால், நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து சரி செய்யும் வரை விமானத்தை இயக்குவது ஆபத்தில் முடியும் என்பதால் டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை ஏர் இண்டியா செய்து கொடுத்துள்ளது. அமிர்தசரஸ் டு பர்மிங்ஹாம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர். ஆமதாபாத்தில் விமானத்தில் சிக்கிய ஏர் இண்டியா விமானத்திலும் இந்த ரேம் ஏர் டர்பைன் அமைப்பு உள்ளது. தொழில்நுட்ப கோளாறால் இன்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்ட நிலையில், ரேம் ஏர் டர்பைன் சிஸ்டம் எமர்ஜென்சி இன்ஜினாக செயல்படத் துவங்கியது. ஆனாலும் விபத்து நடந்து 270க்கு அதிகமானவர்கள் பலியாகிப் போன சோகம் நடந்து விட்டது. ஆனால், இம்முறை ரேம் ஏர் டர்பைன் சிஸ்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டு பத்திரமாக விமானம் தரையிறங்கியதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக விமான போக்குவரத்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏர் இண்டியா விமானங்களில் சமீபகாலமாக அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது சகஜமாகி வருகிறது. அது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #AirIndia #EmergencyLanding #FlightSafety #AviationNews #AirIndiaFlight #BirminghamBound #AmritsarToBirmingham #PassengerSafety #AviationEmergency #FlightIncident #AhmedabadFlight #AirlineNews #TravelSafety #AviationSafety #FlightCrash #AirlineEmergency #SafeLanding #AirIndiaNews #UKBoundFlight #PassengerExperience #AviationCommunity #FlightUpdates #EmergencyEngine #AviationStories #TravelNews #AirlineSafety #AviationLovers #FlightRescue