உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோட்டில் வடமாநிலத்தவர் ஓட்டுக்கு திமுக போட்ட ஸ்கெட்ச் | Erode Election | DMK

ஈரோட்டில் வடமாநிலத்தவர் ஓட்டுக்கு திமுக போட்ட ஸ்கெட்ச் | Erode Election | DMK

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தி உட்பட வடமொழி பேசும் தொழிலாளர்களின் ஓட்டுக்களை பெற திமுக பல யுக்திகளை கையாள்கிறது. இந்தி தெரியாது போடா என்றும், இரு மொழி கொள்கை பேசும் திமுகவினர் ஈரோட்டில் வட மாநிலத்தவர் ஓட்டுக்களை பெற இந்தியை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் என்.எம்.எஸ் காம்பவுண்ட், சின்னமாரியம்மன் கோயில் வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் வாக்காளர்கள் வரை வடமாநிலத்தவர்கள் உள்ளனர். இதனால் இந்தி தெரிந்த திமுகவினர், இஸ்லாமியர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து சென்று அப்பகுதிகளில் ஓட்டு சேகரிக்கின்றனர். வடமாநிலத்தவர்களை கவரும் பாணியில் பேசி உங்களுக்கு திமுக தான் பாதுகாப்பு என்பது போன்று பிரசாரம் செய்து வருகின்றனர். வட மாநில மக்களை கவரும் வகையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் போட்டோவுடன் இந்தியில் நோட்டீஸ் அடித்து விநியோகம் செய்து வருகின்றனர். திமுகவின் இந்த ஓட்டு அறுவடை முயற்சிக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியை எதிர்க்கிறோம், இந்தி பேச மாட்டோம், இந்தி தெரியாது போடா, தமிழகத்துக்குள் இந்தியை நுழைய விடமாட்டோம் என கூறும் திமுகவினர் இந்த செயல் அதிருப்தியை தருகிறது. இங்கு வசிக்கும் வடமாநிலத்தவர்களில் 70 சதவிகிதம் பேர் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, சொந்த குடியிருப்புகள், கடைகள் வைத்துள்ளனர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை