கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் | FakeCurrency| AndhraPolice
கைமாறிய கள்ள நோட்டுகள் போலீசிடம் சிக்கிய கும்பல் ஆந்திராவின் ஏலூரை சேர்ந்தவர் வியாபாரி பனிக்குமார். கடந்த மாதம் இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதற்கு மாற்றாக அச்சு அசலாக 44 லட்சம் ரூபாய்க்கான கள்ள நோட்டுகள் தருவதாக கூறினர். பனிக்குமாரும் அதற்கு சம்மதித்து மர்ம நபர்களுக்கு முன் பணமாக 3 லட்சம் ரூபாய் அனுப்பி வைத்தார். மீதி 7 லட்சம் தந்ததும் 44 லட்சத்திற்கான கள்ள நோட்டை தருவதாக அந்த கும்பல் கூறியது. பனிக்குமார் இது குறித்து தன் நண்பர்களுடன் ஆலோசித்தார். மர்ம நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, கள்ள நோட்டு ரூபாய் கும்பல் குறித்து, ஏலூர் போலீசில் பனிக்குமார் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின் படி, மீதிப் பணத்தை தந்து கள்ள நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக மர்ம கும்பலிடம் பனிக்குமார் போனில் கூறினார். நல்ல நோட்டுகளை பெற்று கள்ள நோட்டை ஒப்படைக்க ஏலுார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.